search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரடி சாய்பாபா நூற்றாண்டு விழா"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் 3 நாட்கள் நடந்த சமாதி நூற்றாண்டு சிறப்பு பூஜையின்போது 5 கோடியே 97 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். #Saibabatemple #Saibabasamadhicentenary
    மும்பை:

    மராட்டிய மாநிலம் சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு திரளான பக்தர்கள் வந்து சாய்பாபா அருள் பெற்று செல்வது வழக்கம். 

    இதற்கிடையே, சீரடி சாய்பாபா சமாதி நிலையை அடைந்த நூற்றாண்டு விழா இந்த ஆண்டு சீரடியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரையிலான மூன்று நாட்களில் நடைபெற்ற பூஜையின்போது உண்டியல் வருமானமாக 2.52 கோடி ரூபாயும், ஆன்லைன் முன்பதிவு உள்பட பல்வேறு கவுன்ட்டர்களில் ரசீது விற்பனை மூலமாக சுமார் 83 லட்சம் ரூபாயும் வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆன்லைன் மூலமாகவும் காசோலை, கேட்போலை மூலமாக ரூ.1.41 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதுதவிர அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா கோயில் மூலம் ரூ.1.46 கோடி ரொக்க நன்கொடை கிடைத்தது.

    மேலும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக ரூ.28.24 லட்சம், வெளிநாட்டுப் பணமாக ரூ.24.55 லட்சம், கட்டண தரிசனம் மூலம் ரூ.78 லட்சம், ஆன்லைன் நுழைவுச்சீட்டு மற்றும் லட்டு விற்பனை மூலம் ரூ.28.52 லட்சம் என இந்த 3 நாட்களில் சாய்பாபா சமிதி நிர்வாகத்துக்கு 5 கோடியே 97 லட்சம் ரூபாய் நன்கொடையாக சேர்ந்ததாக சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் ருபல் அகர்வால் தெரிவித்துள்ளார். #Saibabatemple #Saibabasamadhicentenary 
    ×